Friday, January 27, 2017

மீண்டுமொரு மாட்டுக்கதை

மேய் நிலத்தில் ஓர் மாடு மேய்ந்து கொண்டிருந்தது. மாட்டின் முதுகு பகுதயில் ஆங்காங்கே உண்ணிகள் உலாவியபடி வாழ்ந்து வந்தன. மாட்டின் சொந்தக்காரரான உழவன் உண்ணிகளை எவ்வாறு அகற்றுவது என்ற எண்ணத்தில் ஆழ்ந்திருந்தார். வேண்டிய பொழுதுதான் வேண்டாதோர் வருவர் என்பதற்கேற்ப, உழவனை வஞ்சிக்க நித்தமும் நினைக்கும் தன்னல விரும்பி ஒருவன் உழவனை காண வந்திருந்தான். அப்பாவி உழவனோ தன் சோகக்கதையை வந்தவனிடம் புலம்பியவாறு தன் மனதை தேர்த்திக்கொள்ள முயன்றான். வந்தவன் மூர்க்கத்தனத்தின் மூலம் விளைந்த தன் மூளையை பிழிந்து உழவன் வீழ ஒரு வழியை சொன்னான். அதாவது, மாட்டை கொன்றால் உண்ணிகள் உறையிடமின்றி இறந்துவிடும் என்பதே.

கீழ்குறிப்பு: உழவனை சனாதன தார்மிகனாகவும், மாட்டை தர்மமாகவும், வண் நெஞ்சம் கொண்ட நண்பரை அதர்மமாகவும், உண்ணிகளை உழவனின் பாவத்தினால் ஏற்பட்ட குறைபாடுகளாகவும் உருவகப்படுத்திக்கொண்டு மீண்டும் இப்பதிவை படிக்கவும்.